கள்ளப்பண பறிமாற்றம்: நஜிப்பின் பிரதிநிதித்துவ மனுவின் முடிவு மே 6 அறிவிப்பு

கள்ளப்பண பறிமாற்றம்: நஜிப்பின் பிரதிநிதித்துவ மனுவின் முடிவு மே 6 அறிவிப்பு

கோலாலம்பூர், 10/03/2025 :  SRC INTERNATIONAL நிறுவனத்தின் இரண்டு கோடியே 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள மேலும் மூன்று கள்ளப்பண பறிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் செய்த பிரதிநிதித்துவ மனுவின் முடிவு மே 6-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

பிரதிநிதித்துவ மனுவின் முடிவை அறிவிக்க, தங்கள் தரப்பு புதிய வழக்கு நிர்வகிப்புக்கான தேதியை விண்ணப்பித்திருப்பதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் முஹமட் அஷ்ரொவ் அட்ரின் கமாருல் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி கே.முனியாண்டி அந்த தேதியை நிர்ணயித்தார்.

இன்று இவ்வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொண்ட போது நஜிப்பைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாஃபீ அப்துல்லா, பிரதிநிதித்துவம் தொடர்பான கூடுதல் கடிதம் ஒன்று நாளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் சமர்பிக்கப்படும் என்று கூறினார்.

2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட பிரதிநிதித்துவம் குறித்த கருத்துகளைப் பெறுவதற்காக, இக்கடிதம் அனுப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB மற்றும் இரு குற்றவியல் வழக்குகளைத் தாம் கையாண்டு வருவதால், மே 19 முதல் 23-ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 21 முதல் 25-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட விசாரணை ஒத்திவைக்குமாறு முஹமட் ஷாஃபீ  கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை மே 6-ஆம் தேதி நடத்த நீதிபதி முனியாண்டி அனுமதி வழங்கினார்.

SRC INTERNATIONAL நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி, நஜிப் காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

Source : Bernama

#Najib
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.