சுங்கை கோலோக் முழுவதும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க உத்தரவு
கோலாலம்பூர், 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சுங்கை கோலோக் முழுவதும் அதிக ஆபத்துள்ள இடங்கள் உட்பட சட்டவிரோத தளங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்குமாறு பொது நடவடிக்கைப் படை, பி.ஜி.ஏ-விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுங்கை கோலோக் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளின் தயார்நிலை மற்றும் பாதுகாப்பு அளவை அதிகரிக்குமாறு ஒவ்வொரு பி.ஜி.ஏ செயல்பாட்டாளருக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
தாக்குதல்காரர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டான் ஶ்ரீ ரசாருடின் கூறினார்.
சோதனைச் சாவடிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் குறிப்பிட்டார்.
தென்கிழக்கு படைப்பிரிவு மற்றும் கிளந்தான் போலீஸ், நராத்திவாட் வட்டாரத்தின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் நிலைமை சீரடையும் வரையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று ரசாருடின் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தென் தாய்லாந்திற்குச் செல்லும் மலேசியர்கள் தங்களின் பயணத்தை ஒத்திவைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
Source : Bernama
#CrimeNews
#Thailand
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews