சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

கோத்தா பாரு, 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை போலீஸ் உறுதிபடுத்தியது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மலேசிய – தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு கடுமையாக்கப்படும் என்று, கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில், குறிப்பாக சட்டவிரோத தளங்களில் 24 மணி நேர கண்காணிப்புடன் கட்டுப்பாட்டை அதிகரிக்குமாறு அனைத்து போலீஸ் நிலையத் தலைவர்களுக்கும் பொது நடவடிக்கைப் படைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக டத்தோ முஹமட் யூசோஃப் மாமாட் கூறினார்.

ஜாலான் சுங்கை கோலோக் – சுங்கை பாடியில் உள்ள சுங்கை கோலோக் மாவட்ட அலுவலகத்தின் வெளியே பாதுகாப்பு சோதனைச் சாவடியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தாய்லாந்து போலீஸ் முன்னதாக தெரிவித்திருந்தது.

அதோடு, இரவு மணி 7.10 அளவில் தாக்குதல்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தாய்லாந்தின் பாதுகாப்பு உறுப்பினர்களில் குறைந்தது இருவர் உயிரிழந்த நிலையில் எண்மர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

மாவட்ட அலுவலகத்திற்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியை நோக்கி ஐந்து கையெறி குண்டுகளை வீசுவதற்கு முன்பு தாக்குதல்காரர்கள் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Source : Bernama

#CrimeNews
#Thailand
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.