நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் மலேசியாவில் வசித்திருக்க வேண்டும்

நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் மலேசியாவில் வசித்திருக்க வேண்டும்

கோலாலம்பூர், 06/03/2025 : மலேசியர்களைத் திருமணம் செய்த வெளிநாட்டினர், தற்போது நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முன்னர், மூன்று ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியேறாமல் இங்கு வசித்திருக்க வேண்டும்.

இதற்கு முன்னதாக, அது ஐந்தாண்டு காலமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த புதுப்பிப்பு நடவடிக்கைகள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல், குடிநுழைவுத் துறையால் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர்,டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

”முன்பு, 5 ஆண்டுகளாக இருந்தது, 2 ஆண்டுகள் காத்திருந்த பின்னரே, அவர் விண்ணப்பிக்க முடியும். இந்த புதுப்பிப்பு நடவடிக்கையை, செப்டம்பரில் நாங்கள் தொடங்குவோம். திருமணம் செய்து அவர் இங்கு இருப்பதற்கு 3 ஆண்டுகள் போதுமானது. அவர் இங்கே திருமணம் செய்து திருமணத்தை பதிவு செய்தால், அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு துணை விசா தருவோம். நான்காவது ஆண்டில் அவர் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்”, என்றார் அவர்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் திருமணமாகி, வெளிநாட்டில் திருமண பதிவு செய்திருக்கும் தம்பதிகள், மலேசியாவிற்கு திரும்பும்போது, ​​குடியுரிமை பெறாத கணவன் அல்லது மனைவி நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் ஓராண்டு மட்டுமே இங்கிருந்து வெளியேறாமல் இருக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஜூன் மாதத்திற்குள், எஞ்சிய 11,700 நுழைவு அனுமதிக்கான விண்ணப்பங்களை நிறைவு செய்வதற்கு உள்துறை அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது.

Source : Bernama

#Immigration
#ForeignersMarriageRules
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews