கோலாலம்பூர், 04/03/2025 : தைப்பூசத்தை அவமதிக்கும் வகையில், ERA எப்.எம்-இன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த வானொலி அறிவிப்பாளர்களின் செயல் குறித்து, ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாழும் பல்வேறு மக்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் புரிந்துக் கொள்ளும் வகையில் பல முயற்சிகளை, ஒருமைப்பாட்டு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், பொதுமனப்பான்மையை மக்கள் மத்தியில் வடிவமைக்கும் மிகப் பெரிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் ஊடகங்களின் இதுபோன்ற செயல்கள், அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரும் தடையாக இருப்பதாக, செனட்டர் சரஸ்வதி சாடினார்.
Source : Bernama
#EraFM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.