கோலாலம்பூர், 03/03/2025 : இவ்வாண்டு, பிப்ரவரி 25-ஆம் தேதி வரையில் மூன்று சமூக ஊடக சேவை வழங்குநர் நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன.
WeChat அனைத்துலக நிறுவனம், TikTok நிறுவனம் மற்றும் Telegram Messenger Incorporated ஆகிய மூன்றும் உரிமம் பெற்றிருப்பதாக, தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
பதிவு நோக்கங்களுக்காக தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்வதற்கான பணியில் முகநூல், இண்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களை இயக்கும் META ஈடுபட்டுள்ளதாகவும் தியோ கூறினார்.
”சேவை வழங்குநர்கள் மீதான உரிம கட்டமைப்பின் அமலாக்கம் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் உறுதி செய்ய, X, கூகுள் மற்றும் யூடியூப் ஆகிய தளங்களுக்கு, எம்சிஎம்சி ஆழமான ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. பாதுகாப்பான சமூக ஊடக சூழலை இது உருவாக்கும்”, என்று அவர் கூறினார்.
இன்று மக்களவையில், பினாங்கு, தாசிக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைஃபூல்ருடின் வான் ஜன் எழுப்பிய கேள்விக்கு, தியோ அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#MCMC
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.