ஏரா எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆஸ்ட்ரோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

ஏரா எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆஸ்ட்ரோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 04/03/2025 : ஏரா எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத் தக்கது. இந்தியர்களின் நம்பிக்கையை அது பெரிதும் சீண்டியுள்ளது.

இந்தியர்களின் நம்பிக்கையை அவமதித்த அவர்கள் மீது, ஆஸ்ட்ரோ வானொலி முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தக் காணொலியில், அவர்கள் தைப்பூச புனித நாளை கேலி செய்திருப்பது பல சமூல வலைத்தலங்களில் பகிரப்பட்டிருக்கிறது.

அந்தக் காணொலியில் உள்ளவர்களின் செயல்கள் இந்தியர்களைப் புண்படுத்தும் வகையிலும், கவலையை உண்டாக்கும் வகையிலும் உள்ளது. இது மலேசிய நாட்டின் அடையாளத்தையும், பரஸ்பர மரியாதையையும் இனங்களுக்கிடயிலான புரிதலையும் பிரதிபலிக்கவில்லை.

தைப்பூச விழாவில், காவடி எடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை இவர்கள் கேலி செய்வதும், அவமதித்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அமைச்சர் வலியுறுத்தினார்.

#GobindSinghDeo
#EraFM
#VelVel
#DaturSeriMSaravanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.