அலோஸ்டார், 03/03/2025 : நேற்று, கெடா, அலோஸ்டார், ஜாலான் தொக் கெலிங்கில் உள்ள வீடொன்றில் தமது தாயைக் கொலைச் செய்து எரித்ததாக சந்தேகிக்கப்படும், 43 வயதான ஆடவர், இன்று தொடங்கி ஏழு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ள அவ்வாடவருக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நூர் ஷிஃவா முஹமட் ஹம்சா அத்தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
68 வயதான மாது ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மாற்றுத் திறனாளி அட்டைக் கொண்ட மனநலம் பாதிகப்பட்ட மகன், தமது தாயைக் கொலை செய்ததாக நம்பப்படுகின்றது.
அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை, வீட்டிலிருந்த 14 வயதான மற்றொரு மகன் பார்த்ததாக, கோத்தா செத்தார் மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி சித்தி நோர் சலாவாத்தி சாட் கூறினார்.
நேற்று காலை மணி 7.48-க்கு சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், அங்கு சென்றபோது அம்மாதுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Source : Bernama
#PDRM
#AlorSetar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.