டேசாரு, 28/02/2025 : ஆசியானில் முழு உறுப்பியம் பெறுவதற்கான முயற்சியில் மலேசியாவின் வலுவான ஆதரவிற்கு திமோர் லெஸ்தே நன்றி பாராட்டியது.
அதே வேளையில், ஆசியான் உறுப்பியத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான அதன் நிலைப்பாட்டையும் அது மீண்டும் உறுதிப்படுத்தியது.
அதிலுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதால், உறுப்பியம் பெறுவதற்கான சரியான தடத்தில் திமோர் லெஸ்தே செல்வதாக திமோர் லெஸ்தே வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர், பிலிபஸ் நினோ பெரைரா நம்பிக்கைத் தெரிவித்தார்.
“நாங்கள் ஆசியான் கூட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்கிறோம். முழு உறுப்பியம், சுமூகமாகவும் சரியான நேரத்திலும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் ஆசியான் செயலகத்துடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்”, என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பு, மூத்த பொருளாதார அதிகாரிகள் ஆயத்த கூட்டம் மற்றும் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் ஆகியவற்றின் உயர் மட்ட பணிக்குழுவில், நேரடி பங்கேற்பு குறித்தும் பிலிபஸ் கருத்துரைத்தார்.
வரும் காலத்தில், முழு உறுப்பியம் பெற்று, அதன் கடமையை நிறைவேற்றுவதில் திமோர் லெஸ்தே கொண்டிருக்கும் கடப்பாடு, ஆசியான் உறுப்பு நாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.
Source : Bernama
#TimorLeste
#ASEAN
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews