டேசாரு, 28/02/2025 : வர்த்தக மேம்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக மலேசியா-கம்போடியா கூட்டு வர்த்தகக் செயற்குழு, ஜேதிசி-யை நிறுவுவதற்கான திட்டம் குறித்து இவ்விரு நாடுகளும் விவாதித்திருக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் ஜேதிசி ஒரு தளமாக அமையும் என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிச் தெரிவித்தார்.
ஜோகூர், டேசாருவில் நடைபெற்ற ஆசியான் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தில் கம்போடிய வர்த்தக அமைச்சர் சாம் நிமுலுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இது தொடர்பாக தெங்கு சஃப்ருல் தமது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பல்வேறு துறைகளில் உள்ள கூட்டுத் திட்டங்கள், முதலீடுகள் மற்றும் அதிகரித்து வரும் வர்த்தகங்கள் ஆகியவற்றில் மலேசியாவும் கம்போடியாவும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொள்வதாக அவர் விளக்கினார்.
2024-ஆம் ஆண்டில் மட்டுமே, வர்த்தக அளவு 40 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்து, 191 கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலராக பதிவு செய்யப்பட்டதை சஃப்ருல் சுட்டிக்காட்டினார்.
இது மலேசியாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் உள்ள வளர்ச்சியை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
Source : Bernama
#DatukSeriZafrulAbdulAziz
#ASEAN
#Cambodia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.