கோலாலம்பூர், 27/02/2025 : கடந்த ஆண்டில் 9.8 விழுக்காடு, திரும்ப செலுத்தாத கடன் விகிதம், என்.பி.எல்-லை, தெக்குன் நேஷனல் பதிவு செய்தது.
2023-ஆம் ஆண்டில் அவ்விகிதம், 12.6 விழுக்காடாக இருந்ததாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர், டத்தோ இவொன் பெனெடிக் தெரிவித்தார்.
38 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டதிலிருந்து, அமானா இக்தியார் மலேசியா, கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள தொகை பார் விகிதத்தை 0.02 விழுக்காடு எனும் சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது.
2023-ஆம் ஆண்டில் அவ்விகிதம், 0.09-ஆக பதிவாகியதாக இவொன் பெனெடிக் சுட்டிக் காட்டினார்.
”எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பின்வருபவை அடங்கும். முதலாவதாக, தொழில்முனைவோருக்கு நிலையான பணப்புழக்கத்தைக் கொண்டிருக்கவும், பின்னர் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் உதவும் வகையில் நிதி நிர்வகிப்பு மற்றும் வணிகத் திட்டமிடல் குறித்த பயிற்சியை வழங்க கடன் ஆலோசனை மற்றும் நிர்வகிப்பு நிறுவனம் (AKPK) இணைந்து நிதிக் கல்வித் திட்டத்தை நடத்துதல். மேலும், கடன்களை திருப்பிச் செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கடன் பெறுபவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அடிப்படை தொழில்முனைவோர் கருத்தரங்கை நடத்துவதும் இதில் அடங்கும்”, என்று அவர் கூறினார்.
இன்று, மக்களவையில், 2024-ஆம் ஆண்டில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தெக்குன் நேஷனல் மற்றும் AIM போன்ற நிறுவனங்களின் என்.பி.எல் விகிதத்தை குறைப்பது மற்றும் அதன் அடைவுநிலை குறித்து, ஶ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ ஶ்ரீ டொரிஸ் சோப்ஃயா புரோடி எழுப்பிய கேள்விக்கு, அவர் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews