ஆசியான் மையத்தன்மையை உறுப்பு நாடுகள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்

ஆசியான் மையத்தன்மையை உறுப்பு நாடுகள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்

ஹனோய்[வியட்நாம்], 26/02/2025 : உலகின் வளர்ச்சியை மாற்றம் கண்டு வரும் புவிசார் அரசியல் மற்றும் மாறுபட்ட தேசிய நலன்களே தீர்மானிப்பதால், ஆசியான் மையத்தன்மையை அதன் 10 உறுப்பு நாடுகள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“ஆசியான் அதன் முகமை மற்றும் வியூக சுயாட்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்த அதன் மையத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. இருப்பினும், மையத்தன்மை என்பது ஓர் உரிமை அல்ல என்பதையும் மாறிவரும் எதிர்பாரா நிகழ்வுகளின் மூலம் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சலுகை என்பதை ஆசியான் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

புதன்கிழமை, வியட்நாம் ஹனோயில் நடைபெற்ற ஆசியானின் எதிர்காலம் எனும் மாநாட்டில் உரையாற்றும் போது, பிரதமர் அவ்வாறு கூறினார்.

உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் ஆசியானின் மையத்தன்மை ஒரு சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

Source : Bernama

#MalaysiaVietnam
#PMAnwar
#ASEAN
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.