என் தமிழ்

ஆற்றோரத்தில் பெண் வியாபாரி சடலம்; ஆடவருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

குவாந்தான், 21/02/2025 : குவாந்தான், தஞ்சோங் லும்போர் பாலம் அருகே உள்ள ஆற்றோரத்தில் பெண் வியாபாரி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் தடுப்புக் காவல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த 53 வயது ஆடவரின் தடுப்புக் காவல் இன்றோடு நிறைவடையும் வேளையில், அதனை நீட்டிக்குமாறு செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு, குவாந்தான் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதின் நோர் இஸாதி ஸக்காரியா அனுமதியளித்ததாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முஹமட் வான் புசு தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணையை மேற்கொள்ள இத்தடுப்புக் காவல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உணவு வியாபாரியான 37 வயதான நோர்ஷமிரா சைனானில் உடலில் குற்றவியல் அம்சங்கள் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்து, கடந்த சனிக்கிழமை திரெங்கானு, கோலா திரெங்கானுன் Wakaf Tembesu Gong Badak வீடமைப்பு பகுதியில் ஆடவர் ஒருவரை போலீஸ் கைது செய்தது.

Source : Bernama

#Kuantan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top