ஈப்போ, 18/02/2025 : நேற்று பாரிட், கம்போங் தெர்புஸ் அருகிலுள்ள சுங்கை பேராக் ஆற்றில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 16 வயதுடைய இரு இளைஞர்களைத் தேடும் நடவடிக்கை சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவுப்படுத்தப்படவிருக்கிறது.
பந்தாய் ரெமிஸ், பங்கோர், ஶ்ரீ இஸ்கண்டார், கோலா கங்சார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு மீட்புப் படையினர், போலீஸ் மற்றும் சுற்றுவட்டாரக் குடியிருப்பாளர்கள் உட்பட 25 பேரை உட்படுத்தி அத்தேடல் நடவடிக்கை இன்று காலை தொடரப்பட்டது.
BBP பங்கோரைச் சேர்ந்த நீர் மீட்புக் குழுவினர் PPDA மற்றும் K9 எனப்படும் மோப்ப நாய் ஆகியற்றின் துணையுடன், பாதிக்கப்பட்ட இருவர் விழுந்த இடத்தில் தேடல் நடவடிக்கையைத் தொடங்கியதாக, பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM-இன் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்சி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று பாரிட்டில் உள்ள சுல்தான் முஹமாட் ஷா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் ஆற்றில் விழுந்த பந்தை எடுக்கச் செல்கையில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மாலை மணி 4.21-க்கு பொதுமக்களிடமிருந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews