கோலாலம்பூர், 17/02/2025 : ஒவ்வொரு மாதமும் சந்தைகளில் உதவித் தொகை பெற்ற 60 ஆயிரம் மெட்ரிக் டன் பாக்கெட் சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீட்டை, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கேபிடிஎன் நிலைநிறுத்தி வருகின்றது.
2022ஆம் ஆண்டின் மலேசிய புள்ளி விவரத்துறையின் தரவுகளைக் கணக்கில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதன் துணை அமைச்சர், டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு மொத்தம் மூன்று கோடியே மூன்று லட்சம் மெட்ரிக் டன் பாக்கெட் சமையல் எண்ணெய்யை, 79 லட்சம் குடும்பங்களில் 80 விழுக்காட்டினர் பயன்படுத்துகின்றனர்.
குறு தொழிற்சாலைகள் மாதத்திற்கு 21ஆயிரத்து 280 டன் பாக்கெட் சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்துவதாக டாக்டர் ஃபுசியா சாலே விளக்கினார்.
“குடும்பங்களுக்கு விநியோகிக்க மொத்தம் 60,000 ஆயிரம் மெட்ரின் டன் போதுமானது. 80 விழுக்காடு குடும்பங்கள் சிறு தொழில்துறை. அதுமட்டுமின்றி, ஒரு முறை மூன்று பாக்கெட் எண்ணெய்கள் வாங்க முடியும் என்று வரம்பு வைத்துள்ளோம். ஏற்றுமதி கடன் கட்டுப்பாட்டாளருக்கு நாங்கள் அறிவுறுத்தினோம்”, என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு, பயனர்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்க அனுமதிக்கும் ஒரு முன்னோடி திட்டத்தை உருவாக்க தொடர்புடைய நிறுவனங்களுடன் கேபிடிஎன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Source : Bernama
#EdibleOil
#CcokingOil
#MonthlyAllocation
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews