பீகார் சிறையில் உள்ள யஷ்வந்த் சின்காவை அத்வானி சந்தித்தார்

பீகார் சிறையில் உள்ள யஷ்வந்த் சின்காவை அத்வானி சந்தித்தார்

ad

ஜார்க்கண்ட் மாநில மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மின்வெட்டைக் கண்டித்து பா.ஜனதா கட்சியின் காசியாபாத் மாவட்ட பா.ஜனதா சார்பில் சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மின்வாரிய பொது மேலாளர் தானேஷ் ஜாவை கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் அவரை போலீசார் வந்து மீட்டனர். 

அதிகாரியை கயிற்றால் கட்டுவதற்கு கட்சியின் மகளிரணி உறுப்பினர்களிடம் தான் கூறியதாக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து தானேஷ் ஜா அளித்த புகாரின் அடிப்படையில் யஷ்வந்த் சின்கா மற்றும் 54 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் காசியாபாத் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். ஜாமினில் வர மறுத்த அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் ஜாமினில் வெளியே வர மறுத்து கடந்த 14 நாட்களான சிறையில் உள்ள அவரை இன்று பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சிறைக்கு சென்று சந்தித்து பேசினார்.