கோலாலம்பூர், 14/02/2025 : கடந்தாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.1 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் வேளையில் முந்தைய ஆண்டில் அது 3.6 விழுக்காடாக இருந்தது.
ஆண்டுக்கு 4.8 முதல் 5.3 விழுக்காடு என்ற அரசாங்கத்தின் இலக்குக்கு ஏற்றவாறு அந்த எண்ணிக்கையும் அமைந்துள்ளது.
உள்நாட்டு தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஏற்றுமதி மீட்சியடைந்ததும் இந்த வளர்ச்சிக்கான உந்துதல் என்று பேங்க் நெகரா மலேசியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகமான வீட்டுச் செலவுகள் அதற்கு முதன்மைக் காரணமாக இருந்தாலும், வலுவான வேலைச் சந்தை, அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நிலையான குடும்ப நிதி நிலை ஆகியவையும் அதற்கு உந்துதலாக இருக்கிறது.
புதிய திட்ட ஒப்புதலுடன், பொது மற்றும் தனியார் துறைகளால் பல ஆண்டு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமும், முதலீடும் நேர்மறையான உத்வேகத்தை காட்டுகிறது.
இதனிடையே, நிலையான உலக பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பத் துறையில் தேவை அதிகரிப்பு, சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் செலவினங்களின் அதிகரித்ததைத் தொடர்ந்து ஏற்றுமதிகள் மீட்சி அடைந்ததற்கான காரணங்கள் ஆகும்.
Source : Bernama
#Economy
#MalaysianEconomy
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews