பூச்சோங், 14/02/2025 : முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சரை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசாங்கம் உடன்படவில்லை.
தற்போது நடப்பில் இருக்கும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர், ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் HARMONI எனப்படும் மத நல்லிணக்க செயற்குழு ஆகியவை போதுமானவை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“ரவுப் நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்று, அவரது தனிப்பட்ட குரலாக இருந்தது. அதை அரசாங்கமோ அல்லது அமைச்சரவைவில் உள்ளவர் எவரோ ஏற்றுக்கொள்ளவில்லை. நமக்குத் தெரிந்த வரையில், நியமனம் பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மத அமைச்சர், ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நல்லிணக்க செயற்குழுவும் உள்ளது. அது போதுமானது,” என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள As-Salam பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அவ்வாறு கூறினார்.
பிரதமர் துறையில் உள்ள மத விவகாரங்களுக்கான அமைச்சை இரண்டாகப் பிரித்து, இஸ்லாமிய விவகாரம் மற்றும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கான விவகாரம் என்று வைக்கும்படி மக்களவையில் ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யு ஹுய் பரிந்துரைத்திருந்தார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews