பேராக் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு 

பேராக் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு 

மஞ்சோங், 13/02/2024 : பேராக் மாநிலத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிச் சீருடை, காலணி மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய பள்ளி தவணையைத் தொடங்கும் வசதி குறைந்த மாணவர்களின் பெற்றோர்களின் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று காலை சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மஞ்சோங் மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மலேசிய மக்கள் குரல் சங்கத்தின் ஏற்பாட்டில் பேராக் மாநில ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவுடன் இந்த உதவி வழங்கப்பட்டது.

“இந்த நிகழ்வு தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது மஞ்சோங் மாவட்டம் மற்றும் கிந்தா உத்தாராவில் உள்ள தேசிய பள்ளிகளின் மாணவர்கள் 500 பேருக்கும் இவ்வாண்டு  பள்ளீச் சீருடை, காலணி மற்றும் புத்தகப் பையை வழங்கியுள்ளனர்,” என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் சண்முகம் கூறினார்.

மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் என்று சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புறப்பாடப் பிரிவு துணைத் தலைமை ஆசிரியருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் புவனேஸ்வரன் கணேசன் உட்பட அவரது செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அதோடு, உதவிகள் பெரும் மாணவர்களுடன் சுற்றுவட்டார தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் வருகைப் புரிந்திருந்ததாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் சண்முகம் தெரிவித்தார்.

Source : Bernama

#MalaysianMakkalKural
#BackToSchool
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews