கோலாலம்பூர், 13/02/2025 : மலேசியாவை கவரக்கூடிய மற்றும் போட்டித்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்டறிந்து வருகிறது.
அதில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திருக்கும் JS-SEZ எனப்படும் ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், சிங்கப்பூர் மட்டுமின்றி மற்ற நாடுகளிலிருந்தும் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகின்றார்.
“பின்னர், தாய்லாந்து உடனான நமது திட்டம் தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களான பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரெங்கானு மற்றும் தாய்லாந்தின் நான்கு தெற்குப் பகுதிகள் வளர்ச்சியடைவதை உறுதி செய்வதாகும். நமக்கு இரண்டு சந்திப்புகள் உள்ளன. அந்த வளர்ச்சியை உறுதிசெய்ய இந்த பிப்ரவரி 18-ஆம் தேதி நான் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறேன்,” என்றார் அவர்.
மலேசியாவை கவரக்கூடிய மற்றும் போட்டித்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் குறித்து மக்களவையில் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லினா அப்துல் ரஷிட் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews