பெரும்பான்மையான அரசு முதலீட்டினையும், சிறுபான்மை தனியார் பங்குகளையும் கொண்டு இயங்கிவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிதி நெருக்கடியால் தள்ளாடி வந்தது. கணிசமான நிதி உதவி இல்லாமல் இன்னும் ஒரு ஆண்டு கூட இந்த நிறுவனத்தால் செயல்பட முடியாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுவந்த நிலையில் இரண்டு பேரழிவு விபத்துகளையும் இந்த நிறுவனம் சந்திக்க நேர்ந்தது.
நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தைப் பழுதுபார்க்கும் திட்டத்தின் முதல் நிலையே தற்போது குறிப்பிடப்படுகின்றது என்று கூறியுள்ள முதலீட்டு நிறுவனம் மற்ற விரிவான திட்டங்கள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தேசிய நிறுவனமான மலேசியன் ஏர்லைன்சைப் புதுப்பிக்க அனைத்துப் பிரிவினரும் நெருக்கமாக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுவது அவசியம் என்றும் நிதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.