புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிக்கின்றனர். முஸ்லிம் உணவகங்கள் பிற்பகல் மூன்று மணிக்குமுன் உணவு விற்பது தடை செய்யப் பட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் இன்று தெளிவுபடுத்தினார்.
புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமில், இந்த உத்தரவு எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் அதோடு நாட்டில் உள்ள சமய அலுவலகங்கள் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் என்றார்.