லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக பி.பி.ஆர் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன

லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக பி.பி.ஆர் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன

கோலாலம்பூர், 12/02/2025 : பொது குடியிருப்பு மற்றும் மக்கள் வீடமைப்புத் திட்டம், பி.பி.ஆர் உரிமையாளர்கள், லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக தங்களின் வீடுகளைப் பிற தரப்பினருக்கு வாடகைக்கு விடும் நடவடிக்கைகள் இருப்பதை, கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாஃபா ஒப்புக் கொண்டார்.

உள்ளூர் அமலாக்கத் தரப்பினர் நிலையில் அவ்விவகாரத்தைக் களைய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில், அவ்வப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

”அமலாக்கத் தரப்பினரால் கட்டித் தரப்படும் வீடுகள் உண்மையில் வாடகைக்கு அல்லது சொந்தமாக வைத்திருக்க விரும்புவோருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வாடகைக்கு இருப்பவர், வேறொருவருக்கு அதனை வாடகைக்கு விடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம், ” என்று டாக்டர் சலிஹா தெரிவித்தார்.

இன்று மக்களவையில், மலிவு விலை வீடுகள் லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு சலிஹா அவ்வாறு பதிலளித்தார்.

Source : Bernama

#PPRHouses
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews