கோலாலம்பூர், 12/01/2025 : மாணவர் இடைநிற்றல் விவகாரத்தைக் களைவதற்கான உத்திகளின் செயல்திறனை மேம்படுத்த, SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறை, செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்படும்.
படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயம் உள்ள மாணவர்கள், படிப்பை நிறுத்திக் கொண்ட மாணவர்கள் மற்றும் கல்வி அணுகல் கிடைக்காத சிறார்கள் ஆகியோரை பள்ளித் தரப்பினர் முன்கூட்டியே கண்டறிய இந்த மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு செயல்முறை உதவும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.
”இடைநிற்றலைக் களைவத்ற்கான உத்திகளின் செயல்திறனை அதிகரிக்க, இந்த செயல்முறை, செயற்கை நுண்ணறிவு, AI மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறை, பள்ளிகள் தனிப்பட்ட முறையில் மாணவர்களைக் கண்காணித்து, ஆரம்ப கட்டத்தில் கவனம் செலுத்தி, தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,” என்று அவர் விளக்கினார்.
இன்று, மக்களவையில், ஒவ்வொரு மலேசிய சிறார்களின் பின்புலத்தைப் பொருட்படுத்தாமல், வருகைப் பதிவு, பள்ளி இடைநிற்றல் மற்றும் தரமான கல்விக்கான அணுகல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, அமைச்சு மேற்கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து, ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர், அஸ்லி யுசோஃப் எழுப்பிய கேள்விக்கு வோங் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#AITechnologyInEducation
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews