ஜார்ஜ்டவுன், 11/02/2025 : பினாங்கு, ஜாலான் கெபுன் பூங்காவில் அமைந்துள்ள தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்திலும், தைப்பூசம் மிகவும் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
நேற்று தொடங்கியே அம்மாநிலத்தில் உள்ள இந்துக்கள் நேர்த்தி கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
1,500 போலீஸ் உறுப்பினர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் தெரிவித்தார்.
”இந்த தைப்பூச கொண்டாட்டத்தின் போது விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து சமூகத்தினரும் கொண்டாட்டத்தை உணர கொண்டாட்டம் சீராகவும் கட்டுப்பாட்டிலும் நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவர் கூறினார்.
பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொள்ள வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதாலும், அம்மாநில போக்குவரத்து சீராக உள்ளதாக அவர் கூறினார்.
பக்தர்களின் வசதிக்காக பல முன்னேற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் கூறியது.
இம்மாநிலத்திற்கு என்றே பிரசித்திப்பெற்ற தண்ணீர் பந்தல்களும் மக்களின் கவனத்தை ஈர்த்தன.
Source : Bernama
#Thaipusam
#ThanneerMalai
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews