தைப்பூசத்தில் சிலாங்கூர் போலீஸ் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை

தைப்பூசத்தில் சிலாங்கூர் போலீஸ் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை

கோம்பாக், 10/02/2025 : தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம், தங்களின் உறுப்பினர்களைப் பணியமர்த்தி 24 மணி நேர முழுமையான கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், பொதுமக்களும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதோட  குறிப்பாக திருட்டு வழிப்பறி கொள்ளை போன்ற நடவடிக்கைகளுக்கு பலியாகாமல் இருக்கவும் பிடிஆர்எம்  நினைவூட்டடியது.

அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், பத்துமலையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் போலீஸ் நடவடிக்கை மையங்களுக்குச் செல்லலாம் என்று புக்கிட் அமான் குற்றவியல் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை, JPJKK-இன் வியூகத் திட்டமிடல் துணை இயக்குநர் டத்தோ கே. குமரன் கூறினார்.

இன்று, பத்துமலை, ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தின் தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் ஏற்பாடு செய்திருக்கும் தண்ணீர் பந்தலுக்கு வருகைத் தந்தபோது குமரன் அதனைத் தெரிவித்தார்.

1992-ஆம் ஆண்டு முதல் இப்பணியைத் தொடர்ந்துவரும் பிடிஆர்எம், இம்முறையும் 88 உறுப்பினர்களும் அதிகாரிகளும் அதில் பங்கேற்று ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீரும் குளிர்பானமும் வழங்கி வருகின்றனர்.

Souce : Bernama

#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews