கோலாலம்பூர், 07/02/2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் இந்த வருட தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று தைப்பூச தண்ணீர் பந்தல் ஒன்றை ஜலான் ஈப்போவில் உள்ள முத்தையரா காம்ப்லெக்ஸ் அருகில் அமைக்க உள்ளனர். இந்த தண்ணீர் பந்தல் இரவு 10.00 மணி முதல் சேவை வழங்கும். இந்த தண்ணீர் பந்தலில் சுமார் 5000 முதல் 8000 பக்தர்களுக்கு குளிர்பாணங்களும் கடலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தண்ணீர் பந்தலுக்கு வந்து தங்கள் தாகம் தணித்துக் கொள்ளும்படி சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கத்தின் தலைவர் திருமதி. சாய் தெரசா மோகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
#PersatuanSaiRamSaiBabaDwarakamaiMalaysia
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia #Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia