பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில் 6,007 வணிக வளாகங்கள் மீது சோதனை

பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில் 6,007 வணிக வளாகங்கள் மீது சோதனை

கோலாலம்பூர், 05/02/2025 : இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஜனவரி 25 தொடங்கி பிப்ரவரி இரண்டாம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில் நாடு முழுவதும் ஆறாயிரத்து ஏழு வணிக வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில், 108 மொத்த வியாபாரத் தளங்களும் ஐயாயிரத்து 899 சில்லறை வியாபாரத் தளங்களும் சோதனையிடப்பட்டதாக உள்நாடு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அமலாக்கத் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.

விலை அட்டையை வைக்கத் தவறியது மற்றும் இளஞ்சிவப்பு நிற விலை அட்டையை வைக்கத் தவறிய குற்றங்களுக்காக 483 வியாபாரிகளை உட்படுத்தி, 21,942 ரிங்கிட் 85 சென் மதிப்பிலான பறிமுதல் மேற்கொள்ளப்பட்டதாக, இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் விவரித்தார்.

எனினும்,  பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில் அமல்படுத்தப்பட்ட காலகட்டம் முழுவதும், நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலையில் விற்கப்பட்டதாக எந்தவொரு குற்றமும் கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பிலான எந்தவொரு புகாரையும் தமது தரப்பு பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்திட்டத்தின் அதிகபட்ச விலை அமலாக்கத்தை பெரும்பாலான வியாபாரிகள் முறையாகப் பின்பற்றியதாக அஸ்மான் மேலும் குறிப்பிட்டார்.

Source : Bernama

#ChineseNewyear
#PriceControl
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia