பத்து மலை, 04/02/2025 : இன்று காலை, போக்குவரத்து அமைச்சர் YB அந்தோனி லோக் சியூ ஃபூக், பத்து மலை இரயில் நிலையத்தில் தைப்பூசம் 2025 பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். KTMB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, YBhg. டத்தோ முகமது ராணி ஹிஷாம் சம்சுடின், RAC தலைமை நிர்வாக அதிகாரி, YBhg. டத்தோ அசார் அஹ்மத், APAD இயக்குநர் ஜெனரல், YBhg. டத்தோ அஸ்லான் பின் அல் பக்ரி மற்றும் ரேபிட் பஸ் தலைமை நிர்வாக அதிகாரி, என்சிக் கு ஜமில் ஜகாரியா மற்றும் ஊடக நண்பர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தைப்பூசத்தின் போது பயணத்தை எளிதாக்க, KTMB பிப்ரவரி 9 – 12, 2025 வரை 4 பகல்கள் மற்றும் 3 இரவுகளுக்கு கூடுதல் ரயில் சேவைகளை வழங்கும்.
இந்த கொண்டாட்டம் முழுவதும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போர்ட் கிளாங் – தஞ்சங் மாலிம் – போர்ட் கிளாங் வழிதடத்தில் முழு அட்டவணையின்படி ரயில்கள் இயங்கும்.
கிளாங் பள்ளத்தாக்கில் பத்துமலை கோவிலில் நடைபெறும் தைப்பூச கொண்டாட்டத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு வசதியாக 2025 பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் KTM ரயில் சேவைக்கான இலவச பயணக் கட்டணம் குறித்தும் அமைச்சர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அறிவித்துதார்.
#KTM
#FreeTrain
#Thaipusam2025
#BatuCaves
#AnthonyLokeSiewFook
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.