கோலாலம்பூர், 03 பிப்ரவரி (பெர்னாமா) — கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மேலவையில் நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக சட்ட மசோதா, சட்டம் 588 அமலாக்கத்தின் வழி இணையக் குற்றங்கள் மற்றும் மோசடிகள் போன்ற குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கும் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்கும் சில புதிய விதிமுறைகளை அச்சட்ட மசோதா அறிமுகப்படுத்தும் என்று தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
“அந்த இலக்கவியல் அரசாங்கம் குறித்த மாமன்னரின் அந்த உத்தரவு ஒரு முக்கிய அம்சமாகும். ஆனால், அதே நேரத்தில் பரவலான மோசடிகளின் அறிகுறிகள் குறித்து மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். எங்களிடம் செயல்படுத்தக்கூடிய சில புதிய அதிகாரங்கள், புதிய சட்டங்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன்”, என்று அவர் கூறினார்.
இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் ஃபஹ்மி ஃபட்சில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
செக்ஷன் 211 மற்றும் செக்ஷன் 233 உட்பட நடப்பில் உள்ள விதிமுறைகளை மேம்படுத்துவதன் வழி இணைய மோசடியை குறிப்பாக சமூக ஊடகங்களைக் கையாள்வது சட்டம் 588-இன் நோக்கமாகும்.
Source : Bernama
#FahmiFadzil
#DigitalLaws
#InternetCrimesInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia