ஜாலான் சுல்தான் இஸ்மாயில், 03/01/2025 : தொழிலாளர்களின் நலன் மற்றும் வணிக ரீதியிலான போட்டித்தன்மைக்கு இடையே சமநிலையை உறுதிச் செய்யும் நோக்கில், அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு விழுக்காடு, ஊழியர் சேமநிதி வாரியத்தைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக பரிந்துரைக்கப்பட்ட 12 விழுக்காட்டைக் காட்டிலும் இது குறைவானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
12 விழுக்காடு வரையிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதுதான் முதற்கட்ட திட்டமாக இருந்துள்ளது.
இருப்பினும், பொருளாதாரம், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் நலன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதனை 2 விழுக்காடாக குறைக்க அரசாங்கம் முடிவு செய்ததாக, பிரதமர் தெரிவித்தார்.
“நாங்கள் அதை இரண்டு விழுக்காடில் நிலைநிறுத்தினோம். மிகவும் குறைவான விழுக்காட்டில். தொடக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டபோது 12 விழுக்காடாக இருந்தது. பின்னர், அது குறித்த மேல்முறையீட்டை அமைச்சரவை பரிசீலித்தது. எனவே, நாங்கள் அதை இரண்டு விழுக்காடாக வைத்திருந்தோம். அனைத்து விவகாரங்களும் சரியாக அமையும் வரை சிறிது காலத்திற்கு காத்திருக்கின்றோம். முன்பை போல் நூற்றுக்கணக்கான மில்லியன் அல்லது பில்லியன் லாபத்தைப் பதிவு செய்ய முடியும். ஆனால், தற்போது இரண்டாக வைத்திருப்போம்”, என்று அவர் கூறினார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற ACCCIM எனப்படும் வணிக மண்டபம் மற்றும் மலேசிய சீன தொழில்துறை இணைந்து நடத்திய சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் அதனை கூறினார்.
Source : Bernama
#PMAnwar
#EPF
#ForeignEmployeeEPF
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia