பிரதமரின் கூட்டரசு பிரதேச தின வாழ்த்து

பிரதமரின் கூட்டரசு பிரதேச தின வாழ்த்து

கோலாலம்பூர், 01/02/2025 : நாட்டின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில், சக மக்களிடையே உள்ள அன்பு, மரியாதை மற்றும் நன்றியுணர்வை வலியுறுத்தும் கருணை குணம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்.

முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்தாலும், நாட்டின் நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது, மடானி கொள்கைக்கு ஏற்ப, அதாவது, தேசிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நிறைவேற்றுவதில் மக்கள் ஒருமித்த கருத்துடன் தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இது, இன்றைய சூழலுக்கு மட்டுமல்லாமல் வருங்காலங்களிலும் தொடரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் Labuan மக்களுக்கு கூட்டரசு பிரதேச தின வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

Source : Bernama
Photo  : Anwar Ibrahim Facebook

#WPDay
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.