ஷா ஆலம், 31/01/2025 : இம்மாத தொடக்கத்தில், இராணுவ சடங்குகளுக்கான உடையைப் போன்று அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காணொளி பரவலாகியது தொடர்பில், அதில் சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பின், தலைவர் உட்பட எழுவர் மீது கூடிய விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 140, 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டம், செக்ஷன் 50(3), தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்ஷன் 233-ரின் கீழ், அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
இன்று, ஷா ஆலமில், சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் அவ்வாறு கூறினார்.
அந்நிகழ்ச்சி, அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அது சுங்கை பூலோவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்றது, விசாரணையில் தெரிய வந்ததாக அவர் மேலும் விவரித்தார்.
அதோடு, இந்த அமைப்பு ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் ஆடைகளில் பயன்படுத்தப்படும் சின்னம் பதிவுசெய்யப்பட்டதைப் போன்றது அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.