உலகம்மலேசியாவட்டாரச் செய்திகள்

ஆசியான் மாநாடு முழுவதிலும் போக்குவரத்து நிர்வகிப்பு, பாதுகாப்பு மேம்பாட்டில் பினாங்கு கவனம்

பட்டர்வெர்த், 31/01/2025 : பினாங்கில், ஆசியான் மாநாடு முழுவதிலும், போக்குவரத்தை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் பினாங்கு கவனம் செலுத்தவிருக்கிறது.

அடுத்த மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மாநாடு உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய தங்கள் தரப்பு தீவிர தயார்நிலை பணிகளை மேற்கொண்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் தெரிவித்தார்.

”உயர்மட்ட அளவிலும் ஊராட்சி தரப்புடனும் சில முறை திட்டமிடல் கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஆசியான் மாநாடு காலக்கட்டம் முழுவதிலும் பாதுகாப்புப் பிரச்சனையையும் போக்குவரத்தையும் நிர்வகிக்க பினாங்கு போலீசார் திறன்மிக்கவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

இன்று, தெற்கு நோக்கி செல்லும் Sungai Dua டோல் சாவடியில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் பினாங்கு மாநில அளவிலான ‘Op Selamat 23/2025’ ஆலோசனை நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹம்சா அஹ்மட் அவ்வாறு தெரிவித்தார்.

2025 ஆசியான் – மலேசியா தலைமைத்துவ காலம் முழுவதிலும், ஏழு அமைச்சுக்கள் நடத்தவிருக்கும் பணி, மூத்த அதிகாரி மற்றும் அமைச்சர் அளவிலான கலந்துரையாடலை உட்படுத்திய 13 முதன்மை கூட்டங்களை பினாங்கு மாநிலம் ஏற்று நடத்தவிருக்கிறது.

அதேவேளையில், வருங்காலத்தில், பினாங்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக இருப்பதை உறுதிசெய்ய, தங்கள் தரப்பு பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக ஹம்சா குறிப்பிட்டார்.

 

Source : Bernama

#ASEAN
#PenangPDRM
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia