டாவோஸ், 22/01/2025 : அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான “அவசர தேவை”, மலேசியாவிற்கு இன்னும் ஏற்படவில்லை.
இதற்கு காரணம், சூரிய ஆற்றல் மற்றும் ஆசியான் மின் கட்டமைப்பு, எபிஜி ஆகியவற்றில் அதிகமான வாய்ப்புகள் உள்ளதைக் காண முடிவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இருப்பினும், மலேசியாவில் தரவு மையத்தை நிறுவுவதற்கு பெரிய அளவிலான திட்டங்கள் உள்ள நிலையில், அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதையும் தாம் மறுக்கவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
“இருப்பினும், தரவு மையங்களைப் பயன்படுத்துவது என்பது மிகப்பெரியது, மேலும், ஒவ்வொரு சந்திப்பிலும் புதிய தேவைகள் உள்ளன. அதை உருவாக்க வேண்டும் என்று மக்கள் பரிந்துரைத்து வருகின்றனர். நான் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஏனெனில், அது ஏ.ஐ தேவைகளின் ஒரு பகுதியாகும். தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இதில் ஈடுபட்டுள்ளதை நான் அறிவேன். நாங்கள் நல்லதொரு விவாத நிலையை அடைவதற்கு ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் முயற்சித்து வருகிறேன், ” என்றார் அவர்.
நேற்று, சுவிட்சர்லாந்து, டாவோஸில் நடைபெற்ற டபல்யூ.இ.எஃப் எனப்படும் உலகப் பொருளாதார மன்றத்தின் 2025ஆம் ஆண்டு உச்சநிலை கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.
மலேசியா அணுசக்தியைக் குறிப்பாக எஸ்.எம்.ஆரை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் அப்பதிலை அளித்தார்.
Source : Bernama
#PMAnwar
#MalaysiaSwitzerland
#NuclearPower
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia