வெளிநாட்டு விளையாட்டாளர்களின் சேவை; உள்துறை அமைச்சின் நிபந்தனைகளைப் பின்பற்றுவீர்

வெளிநாட்டு விளையாட்டாளர்களின் சேவை; உள்துறை அமைச்சின் நிபந்தனைகளைப் பின்பற்றுவீர்

கோலாலம்பூர், 22/01/2025 : தேசிய அணிகளில் வெளிநாட்டு விளையாட்டாளர்களை சேவையைப் பயன்படுத்த ஆர்வம் கொண்டுள்ள தேசிய விளையாட்டு சங்கங்கள், உள்துறை அமைச்சு, கே.டி.என் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் அனைத்து விண்ணப்பங்களையும் உள்துறை அமைச்சு ஆராயும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

“விளையாட்டாளர்கள் சில நிபந்தனைகளைப் பின்பற்ற முடியாமல் இருக்கலாம். கே.டி.என் உதவி செய்யவில்லை என்று அர்தமல்ல மாறாக, சில நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் இருக்கலாம். அவை உள்துறை அமைச்சின் வேண்டுக்கோள் என்பதை சங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். தேவைப்படும் விவகாரங்களை செய்து கொடுப்பதற்கு நான் உதவிகளைச் செய்வோம். ஆனால், அதற்கான முடிவுகள் முற்றிலும் உள்துறை அமைச்சின் கையில் தான் உள்ளது, ” என்றார் அவர்.

நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, விண்ணப்பம் செய்பவர்கள் மலேசியாவில் வசிப்பவர்களாவும் தங்களின் சொந்த நாட்டில் இருக்கக் கூடாது என்றும் ஹன்னா தெரிவித்தார்.

Source : Bernama

#ForeignSportsPerson
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.