டாவோஸ்[சுவிட்சர்லாந்து], 22/01/2025 : JS-SEZ எனப்படும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், அவ்விரு நாடுகளுக்கும் இடையில் வழக்கத்திற்கு மாறான மற்றும் தனித்துவமான ஓர் ஒத்துழைப்பு நடவடிக்கையாகும்.
இரு நாடுகளுக்கும் பலனளிக்கக்கூடிய கூட்டு திட்டங்களில் ஒத்துழைப்பை மேற்கொள்வதில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கைக் கொள்வதற்கான அம்சம் இருப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.
“குறிப்பாக அவற்றுக்கு ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் இருக்கும் போது, நிபுணத்துவம் கொண்ட தரப்புடன் இணைந்து தனியார் துறையுடன் ஒத்துழைப்பு தொடங்க வேண்டும். பின்னர், அரசாங்கங்களுடன் ஒத்துழைக்க வேண்டும், ” என்றார் அவர்.
நேற்று, சுவிட்சர்லாந்து, டாவோஸில் நடைபெற்ற டபல்யூ.இ.எஃப் எனப்படும் உலகப் பொருளாதார மன்றத்தின் 2025-ஆம் ஆண்டு உச்சநிலை கூட்டற்கு வெளியே நடைபெற்ற, “Country Strategy Dialogue” அமர்வில் அவர் அவ்வாறு கூறினார்.
அண்மையில் இறுதி செய்யப்பட்ட JS-SEZ ஒத்துழைப்பில் பிரதமரின் நம்பிக்கைக் குறித்து பங்கேற்பாளர் ஒருவர் எழுப்பியக் கேள்விக்கு அன்வார் பதிலளித்தார்.
Source : Bernama
#PMAnwar
#JS-SEZ
#MalaysiaSwitzerland
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.