அமைச்சரவைக் கூட்டத்தில் இலவச டோல் கட்டணம் குறித்து விவாதிக்கப்படும்

அமைச்சரவைக் கூட்டத்தில் இலவச டோல் கட்டணம் குறித்து விவாதிக்கப்படும்

புத்ராஜெயா, 22/01/2025 : வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பெருநாட்கால இலவச டோல் கட்டணம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் அக்கூட்டத்தில், பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இவ்விவகாரம், இதற்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட குத்தகை ஒப்பந்தம் தொடர்பிலானது என்று குறிப்பிட்ட ஃபஹ்மி , கையெழுத்திடப்படும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் அனைத்து தரப்பினரும் நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.

“நேற்று பொதுப்பணி அமைச்சர் கூறியதுபோல வாழ்க்கைச் செலவினம் அல்லது போக்குவரத்து நெரிசல் என்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இவை இரண்டும் மிகவும் முக்கியம். இந்த வாரம் பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும் நிலையில்,வெள்ளிக்கிழமைறு நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று நம்புகிறேன். அமைச்சரவை அளவிலான அந்தக் கலந்துரையாடல் வழி கிடைக்கும் முடிவிற்காகக் நாம் காத்திருப்போம்,” என்றார் அவர்.

மேலும், பொதுப்பணி அமைச்சு குறிப்பிட்ட அந்த அணுகுமுறை, இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொள்கை அளவிலான முடிவின் அடிப்படையிலானது என்று அவர் தெரிவித்தார்.

Source : Bernama

#FahmiFadzil
#FreeToll
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.