வாஷிங்டன்[அமெரிக்கா], 21/01/2025 : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல் டிரம்ப் பதவியேற்றார்.
இரண்டாம் முறையாக தமது 78-வது வயதில் அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அவர், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.
அதோடு, நாட்டிற்கான புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும், தாம் எப்போதும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கபோவதாகவும் டிரம்ப் தமது பதவியேற்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
டொனல்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் டிரம்பிற்குப் பதவியேற்பு சடங்கினைச் செய்து வைத்தார்.
பதவேற்ற பின்னர் டிராம் தமது மகிழ்ச்சியைக் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
அவரையடுத்து, அமெரிக்க துணை அதிபராக, குடியரசு கட்சி வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
குளிர் காற்று மற்றும் உறைபனி குறித்த வானிலை எச்சரிக்கையினால் வழக்கமாக நடைபெறும் இடத்திலிருந்து இந்த பதவியேற்பு விழா, நாடாளுமன்ற கட்டடத்தின் ரோட்டுண்டா அரங்கிற்கு மாற்றப்பட்டது.
விழாவைக் காண தலைநகருக்குச் சென்ற டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பைக் கண்டனர்.
தமது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து டிரம்ப் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama
#DonaldTrump
#USA
#47PresidentUSA
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia