கிள்ளான், 21/01/2025 : பண்டிகை காலத்தில் வழங்கப்படும் இலவச டோல் சேவைக்குப் பதிலாக மக்களுக்கு உதவும் நோக்கில் இலக்கிடப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
மக்களுக்கு உதவும் நோக்கில் இலக்கிடப்பட்ட அணுகுமுறையைக் கண்டறிய கடந்த ஆண்டு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்ததாகவும் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
“2024ஆம் ஆண்டே பண்டிகை காலத்தில் இலவச டோல் சேவையை வழங்கிய கடைசி ஆண்டாக இருக்கும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காரணம், நாங்கள் இதை ஒருங்கிணைத்துள்ளோம். அரசாங்கமும் இலக்கிடப்பட்டவர்களுக்கு உதவித் தொகையை வழங்க ஒருங்கிணைத்துள்ளது. விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை, சிலாங்கூர், கிள்ளானில், மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை செக்ஷன் 2ஐ அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பின்னர், நந்தா லிங்கி அவ்வாறு கூறினார்.
Source : Bernama
#TollCharges
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia