டாவோஸ்[சுவிட்சர்லாந்து], 21/01/2025 : 2025ஆம் ஆண்டு உலகப் பொருளாதார உச்சநிலை மாநாடு, டபல்யு.இ.எஃபில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுவிட்சர்லாந்து, டாவோஸ் சென்று சேர்ந்துள்ளார்.
உலக அளவிலான சிறந்த ஒத்துழைப்பு வழி உலகளாவிய மற்றும் வட்டார சவால்களைச் சமாளிப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க அன்வார் அங்கு சென்றுள்ளார்.
மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை மணி 1.25 அளவில் பிரதமர் பயணித்த விமானம் சூரிச் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமரை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி டத்தோ நட்சீரா ஒஸ்மான், உலக வர்த்தக அமைப்பின் மலேசிய நிரந்தரப் பிரதிநிதி ஷாரில் சஸ்லீ கஸாலி மற்றும் பெர்னில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அஹ்மத் பென்யாமின் நூர் ரஹிமின் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் சூரீச் விமான நிலையத்திலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸூக்குத் தரைவழியாக அன்வார் பயணம் செய்தார்.
முன்னதாக, ஐக்கிய அரபு சிற்றரவு, பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்திற்கு மேற்கொண்ட அலுவல் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் டாவோஸ் வந்துள்ளார்.
Source : Bernama
#PMAnwar
#Switzerland
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia