கோலாலம்பூர், 18/01/2025 : சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனவரி 27, 28 மற்றும் பிப்ரவரி 1,2 ஆகிய 4 நாள்களுக்குச் சரக்கு வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாண்டு ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வரை, அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம்மின் ஒபி செலாமாட் சோதனை நடவடிக்கை முழுவதிலும் சாலை தடுப்பு நடவடிக்கையுடன் தேசிய வேக வரம்புக் குறைப்பு உத்தரவும் அமல்படுத்தப்படும்.
குறிப்பாக அன்றைய தேதியில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் தனியார் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு,
இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் போக்குவரத்து அமைச்சு தெரிவித்திருந்தது.
பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதோடு சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக இத்தடை அமல்படுத்தப்படவுள்ளது.
அதனை உறுதி செய்ய சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே, நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : Bernama
#ChineseNewYear
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia