ஆசியான் தலைமைத்துவத்தின் இலக்கை எஎம்எம் கூட்டம் வடிவமைக்கும்

ஆசியான் தலைமைத்துவத்தின் இலக்கை எஎம்எம் கூட்டம் வடிவமைக்கும்

லங்காவி, 18 ஜனவரி (பெர்னாமா) — இந்த ஆண்டிற்கான ஆசியான் தலைமைத்துவத்தின் இலக்கை, இன்று நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் வடிவமைக்கும்.

அதில்,மே அக்டோபர் அல்லது நவம்பர் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆசியான் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்வு காணப்பட்ட மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் சார்ந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.

“கணிசமான ஒரு விவாதம் இருக்கும், மேலும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் தீர்வுக் கூட்டம் குறித்து இரண்டாவது நாளுக்குப் பிறகு ஒரு அறிக்கையை வெளியிடுவோம், இது தலைவர்களின் உச்சநிலை மாநாட்டிற்கான ஒரு தளத்தை வழங்கும், ” என்றார் அவர்.

2025ஆம் ஆண்டின் தலைவராக மலேசியாவின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த இந்தத் தீர்வுகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறன.

Source : Bernama

#ASEAM
#MMM
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.