பகாங்கில் தொடர்கொலை மற்றும் கற்பழிப்புக்குப் புகழ்ப்பெற்ற “ரேம்போ பெந்தோங்” என்ற கொலையாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் 17 வயது இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக ரபிடின் சாத்திர் (வயது 43) என்ற அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.






