நிபொங் திபால், 17/01/2025 : எதிர்காலத்தில் மடானி புத்தக பற்றுச்சீட்டு திட்டத்தை ஆசிரியர்களுக்கும் வழங்கி அதனை விரிவுப்படுத்தும் முயற்சி குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது.
நான்காம் ஆண்டுக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு 50 ரிங்கிட் பற்றுச்சீட்டும் இடைநிலைப்பள்ளியில், ஆறாம் படிவம், மெட்ரிகுலேஷன் மற்றும் மலேசிய ஆசிரியர் பயிற்சி கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு 100 ரிங்கிட் பற்றுச்சீட்டும் தற்போது இத்திட்டத்தில் கீழ் வழங்கப்பட்டு வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் கொண்டிருப்பதால் இதனை தொடரவும், ஆசிரியர்களுக்கு வழங்கவும் அமைச்சு எண்ணம் கொண்டிருப்பதாக ஃபட்லினா சிடேக் கூறினார்.
இன்று, பினாங்கு செரி தாசேக் தேசிய பள்ளியில் நடைபெற்ற பினாங்கு மாநில அளவிலான ஆரம்பப் பள்ளி உதவிநிதி பிஏபி, வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பற்றுச்சீட்டின் மதிப்பு குறித்து விவனப்பட்ட போது அது குறித்து முதலில் நிதி அமைச்சுடன் விவாதிக்க வேண்டும் என்று ஃபட்லினா கூறினார்.
Source : Bernama
#FadhlinaSidek
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.