ஜிஐஎஸ்பிஎச்; மீட்கப்பட்டவர்களில் 448 பேர் மீண்டும் அவர்களின் குடும்பத்திடம் ஒப்படைப்பு

ஜிஐஎஸ்பிஎச்; மீட்கப்பட்டவர்களில் 448 பேர் மீண்டும் அவர்களின் குடும்பத்திடம் ஒப்படைப்பு

தும்பாட், 17/01/2025 : ஜிஐஎஸ்பி நிறுவனத்துடன் தொடர்புடைய தொண்டு இல்லங்களில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் இதுவரை 448 பேர் மீண்டும் அவர்களின் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் நிரந்தர மற்றும் இடைக்கால உத்தரவுகளைத் தொடர்ந்து ஐந்து சிறுவர்கள் அவர்களுக்கேற்ற தகுதியானவர்களின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளனர் என்பதோடு மேலும் 107 பேர் எட்டு சமூக நலத்துறை நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.

”உண்மையில், முதலில் சிலர் வழக்குத் தொடர நினைத்திருந்தார்கள். பின்னர் சிலர் அதை செய்ய வேண்டாம் ஏனெனில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர்களிடம் அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அது நியாயம் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் போலீஸ் அறிக்கை மற்றும் அதன் சட்டப்பூர்வ செயல்முறைக்காக காத்திருந்தோம், ” என்றார் அவர்.

இன்று கம்போங் பாசீர் பெக்கான் தெங்காவில் காசே மடானி ஒருங்கிணைப்பு திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த நேன்சி ஷுக்ரி அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#GISBH
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia