டாமான்சாரா டாமாய், 15/01/2025 : இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் தலைமையில், பொங்கல் விழா 14/01/2025 அன்று சிறப்பாக நடந்தேறியது.
டாமான்சாரா நாடாளுமன்றமும், டாமான்சாரா டாமாய் இந்தியர் கழகமும் இந்த விழாவை, டாமான்சாரா டாமாய் சமூக மண்டபத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டோருக்கு உணவுக் கூடைகள், வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. இந்தப் பொங்கல் விழாவில் தமிழர் கலாச்சார நடனத்தோடு, பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றன.
பொங்கல் விழா என்பது இந்தியர்களின் முக்கியமாக உலகத் தமிழர்களுக்கான ஓர் உன்னத விழா. பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில், பொங்கல் விழா என்பது அனைத்து இனமும் நன்கு அறிந்த ஒரு மாபெரும் விழா ஆகும். பொங்கல் விழாவினை மக்களோடு இணைந்து நான் பல முறை கொண்டாடியிருக்கிறேன்.
பொங்கல் விழாவானது, நன்றியுணர்வு, செழிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. உழவு தொழில் பாரம்பரியத்தில் வேரூன்றிய பொங்கல், உழைப்பின் மதிப்பு, இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சியையும், நமக்கு நினைவூட்டுகிறது.
கடந்த பிரவாசி மாநாட்டின் போது அதிகாரப்பூர்வ துவக்கம் கண்ட மலேசிய இந்திய இலக்கவியல் மன்றத்தின் வழி இலக்கவியல் விழிப்புணர்வையும், தற்கால தேவைக்கேற்ப இலக்கவியல் தகவல்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அதே வேளையில், இலக்கவியல் துணையோடு, நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டுப் பெருமைகளையும் உலகறியச் செய்ய இயலும். இந்தத் துறை நாம் அறிந்து தெளிவது காலத்தின் கட்டாயம் ஆகும்.
இலக்கவியல் மேம்பாடு நாம் அறிவை உயர்த்துவதோடு, பாரம்பரியத்தைக் காக்கும் வல்லமை கொண்டது. தொழில்நுட்பம் என்பது நம்மை எல்லைகள் கடந்து அனைவரையும் இணைக்கிறது.
இலக்கவியல் துறையில், இளைய சமூகத்தினரிடையே கல்வியறிவை மேம்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியன மலேசிய இலக்கவியல் அமைச்சின் நோக்கம் ஆகும். ஆகவே நாம் அனைவரும் இலக்கவியல் துறையில் உலக மாற்றத்திற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ளுதல் சிறப்பு ஆகும்.
#GobindSinghDeo
#Pongal
#PongalFestival
#PongalInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia