சென்னை[தமிழ்நாடு, இந்தியா],10/01/2025 : தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்ததுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இன்று சென்னையில் ம.இ.கா துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ M. சரவணன், இலங்கை மேனாள் ஆளுநர் திரு செந்தில் தொண்டைமான், நடிகர் பிரசாந்த் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுத் தலைவர் திரு ஒண்டி ராஜா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டிகளை மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Source : Datuk Seri M Saravanan Facebook
#JallikattuInMalaysia
#MIC
#DatukSeriMSaravanan
#ActorPrasanth
#MalaysiaIndia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia