அழகு ராணி போட்டிகள் – தொடரும் ஒப்பந்த மீறல் சர்ச்சைகள்

அழகு ராணி போட்டிகள் - தொடரும் ஒப்பந்த மீறல் சர்ச்சைகள்

செந்தூல், 08/01/2025 : மலேசியாவில் உள்ள அழகுராணிப் போட்டிகளில் ஏற்படும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து 08/01/2025 அன்று மாலை செந்தூலில் உள்ள மெட்ராஸ் கபே யின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. TTIYA புரொடக்‌ஷன்ஸ் மற்றும் எண்டர்டெயின்மண்ட் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

அழகு ராணிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெற்றி பெற்ற பிறகு அழகு ராணிப் போட்டி ஏற்பாட்டாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காமல் அதை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டினர் TTIYA நிறுவனத்தார். அவ்வாறு ஒப்பந்தங்களை மீறிய அழகு ராணி வெற்றியாளர்கள் மீது காவல் துறையில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.

சமீபத்தில் மற்றுமொரு அழகு ராணிப் போட்டி ஏற்பாட்டளருக்கும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் இவ்வாறு மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். இவ்வாறு தொடர்ந்து ஒப்பந்தங்களை மீறுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் இடையே நடைபெறும் சர்ச்சைகள் தொடர்கதையாகும் இந்த சூழலில் அழகு ராணிப் போட்டிகள் மீது அதில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டவர்களிடையே அவநம்பிக்கை ஏற்படும். இது இந்த துறையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். இந்த விஷயங்களை ஒழுங்கு படுத்த அரசின் பங்களிப்புடன் ஏதாவது ஒரு பொது அமைப்பு முன்வந்து இந்த துறையை சரி செய்தால் சிறப்பாக இருக்கும்.

#TTIYAProductionEntertainment
#BeautyPageant
#BeautyPageantIssues
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia