அம்பாங் தொகுதியின் இந்திய இளம் தொழில் முனைவர் இயக்கம் (KUMI) 2014 ஆகஸ்டு 05ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் அம்பாங் இளைஞர் படை சேவை மையத்தில் வணிகம் மற்றும் கல்வி சம்பந்தமான ஒரு பொது கலந்தாய்வு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பிரதமர் துறையின் இந்திய தொழில் முனைவர் உருமாற்ற சிறப்பு செயலகத்தை(SEED) சேர்ந்த பிரதிநிதிகள் திரு. திருமுருகன் மற்றும் திரு. அகிலன் கலந்து கொண்டு தெக்குன் கடனுதவி திட்டம் பற்றிய விளக்கங்கள், புதிதாய் தொழில் துவங்குவதற்கான வழிமுறைகளையும் அரசின் உதவிகளையும் பற்றிய விளக்கங்களும் கலந்துகொண்டுவர்களுக்கு தெரிவித்தனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இளம் தொழில் முனைவர்கள் மற்றும் SEEDஐ சேர்ந்த பிரதிநிதிகளும் பங்குபெற்ற கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் பங்கு பெற்ற தொழில் முனைவர்கள் அவரவர்தம் தொழில் பற்றிய அறிமுக உரைகளை வழங்கினர். இந்திய இளம் தொழில் முனைவர் இயக்கத் (KUMI) தலைவர் திரு. சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நிகழ்வை வழிநடத்தினார்.